Saturday, 7 June 2014

உஷ்ட்ராசனம்

சுவாசக் கோளாறுகள், இரைப்பை கோளாறுகள் நீங்க - உஷ்ட்ராசனம்

உஷ்ட்ராசனம்- ஒட்டகம் போன்று உள்ளதால் இந்த பெயர் ஏற்பட்டது.

செய்முறை:

1. விரிப்பின் மீது மண்டியிட்டு நிற்கவும். பாத விரல்கள் வெளி நோக்கி இருக்க வேண்டும்.
2. முட்டி, பாதங்கள் சிறிது இடைவெளி விட்டு அகட்டி வைக்கவும்.
3. இடுப்பில் கையை வைத்து பின்னோக்கி வளைய வேண்டும்.

பலன்கள்:

முதுகுத் தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. முதுகு வலி, சுவாசக் கோளாறுகள், இரைப்பை கோளாறுகள் நீங்குகின்றன. தன்னம்பிக்கையை வளர்க்கிறது.


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...

காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...

Saturday, 3 May 2014

Relieve Your Headache and Stress With Acupressure in 30 Seconds

Squeeze the fleshy place between your index finger and your thumb, known as the Hoku spot in Chinese medicine. Applying firm pressure there for just 30 secs can reduce stress and tension and works wonder for Headache.Press and hold the point until pain subsides and you feel the muscles relax.

பித்தம் தணிக்கும் பழைய சோற!

'அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்... வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம் சாமி!'' - வெயில் காலத்தில், வேப்ப மரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய டயலாக் இது. கையில் பனை மட்டை விசிறியோடு, மேல் துண்டால் வியர்வையைத் துடைத்தபடி பெரிசுகள் பேசும் இந்த டயலாக், வெறும் வார்த்தை மட்டுமல்ல... 100 சதவிகிதம் உண்மை. 'ஏனென்றால், நீராகாரம் என்கிற பழைய சாதத்தில்தான் அத்தனை சத்துகளும் இருக்கின்றன’ என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துணைப் பேராசிரியர் உஷா ஆன்டனி. பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சிக்கு இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு 'பழைய சாதம்’.
'நம் முன்னோர்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்தது பழைய சாதம். காலையில் ஒரு முட்டி கஞ்சியை, வெங்காயம், பச்சை மிளகாயோடு சேர்த்துக் குடித்துவிட்டுதான் வயலுக்குப் போவார்கள். அவர்களுக்குத் தேவையான உடல் வலிமையையும் சத்தையும் அந்தப் பழஞ்சோறுதான் கொடுத்தது. அப்படி என்னதான் அந்த உணவில்  என்று தெரிந்து கொள்ளத்தான் இந்த ஆராய்ச்சியில் இறங்கினேன்' என்ற உஷா, தொடர்ந்து அதன் நன்மைகளைக் கூறினார்.
'சாதத்தை வடித்து, அதில் தண்ணீர் ஊற்றிவைத்தால், மறு நாள் காலையில் அது பழைய சாதம். சாதத்தை அலுமினியம், மண், ஸ்டீல் எனப் பல்வேறு பாத்திரங்களில் வைத்து பின்னர் அதை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்து பார்த்தோம். மண்பானை பழைய சாதத்தில்தான் நல்ல தரமும் வாசமும் இருந்தது.
சாதத்தில் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊறவிடும்போது அதில் நுண்ணுயிர்கள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா) வளர்கிறது. லேசாக அமிலத்தன்மையும் உண்டாகும். அதனால்தான் அதில் புளிப்புச் சுவை ஏற்படுகிறது. நுண்ணுயிர்கள், வைட்டமின்களை உருவாக்குவதால், 'பி’ வைட்டமின்கள் அதிகரிக்கிறது. புரதமும் மாவுச் சத்தும் (ஸ்டார்ச்) எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது. ஓர் இரவு முழுவதும் ஊறுவதால், அதன் ஊட்டச் சத்துக்கள் அதிகரிக்கப்படுவதுதான், அதன் சத்துக்குக் காரணம். சாதம் மீதி இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் சூடுசெய்து சாப்பிடுவதைவிட, தண்ணீர் ஊற்றி வைத்து சாப்பிடுவது, செரிமானத்துக்கும் நல்லது, சத்துகளும் கிடைக்கும். அந்த ஊட்டச்சத்துகள் கரைந்திருப்பதால், நீராகாரமும் ரொம்ப நல்லது.
மேலும், பழைய சாதம் சாப்பிட்டால் எடை கூடும், தூக்கம் வரும் என்று சொல்வதில் உண்மை இல்லை. எந்த உணவையும் வயிறுமுட்ட சாப்பிட்டால்தான் தூக்கம் வரும். அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போதுதான் எடை கூடும். வெறும் பழையது மட்டும் சாப்பிடாமல், கூடவே துவையல் அல்லது காய்கறிப் பொரியல் ஏதாவது சேர்த்து, 'பேலன்ஸ்டு’ உணவாக சாப்பிட வேண்டும்.
பழைய சாதத்தின் ஆயுள் 15 மணி நேரம்தான். முதல் நாள் இரவு 10 மணிக்கு தண்ணீர் ஊற்றி வைத்தால், அதில் இருந்து அதிகபட்சம் 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். அதற்குமேல் பழைய சாதத்தை அறையின் வெப்பநிலையில் வைக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள், அளவோடு சாப்பிடலாம்' என்கிற உஷா ஆன்டனியின் மாணவிகள் தற்போது, சாமானியர்கள் சாப்பிடும் சத்து நிறைந்த உணவுகளான கேப்பைக் கூழ், கம்மங் கூழ் பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
பழைய சாதம், பச்சை மிளகாய் ஒரு பார்சல்....!
செரிமானத்துக்கு சோற்று நீர்!
''பழைய சாதம் பற்றி, நம் பாரம்பரிய மருத்துவம் என்ன சொல்கிறது?'' என்று சித்த மருத்துவர் திருநாராயணனிடம் கேட்டோம்.
'அகத்தியர் குண வாகடம்’ என்னும் மருத்துவ நூலில் பழஞ்சோற்றின் பெருமை பற்றி, ஒரு பாடலே இருக்கிறது. பொதுவாகவே, வெயில் காலத்தில் பித்தம் அதிகமாக இருக்கும். பித்தம் என்பது நெருப்பின் குணம். அதனால், பித்தம் சார்ந்த நோய்களும் அதிகமாக ஏற்படும். செரிமான நெருப்பு (Digestive Fire) அதிகரிப்பதால், பெரும் பசி எடுக்கும். உடல் எரிச்சல் ஏற்படும். இவை எல்லாவற்றையும் 'நியூட்ரலைஸ்’ செய்து, உடம்பின் தேஜஸைக் கூட்டுகிறது பழைய சோறு. 'பிரமேயம்’ எனப்படும் மனநிலைக் குறைபாடுகள், வன்முறையைத் தூண்டும் ஆக்ரோஷம் ஆகிய உணர்வுகளை இந்த உணவு கட்டுப்படுத்தும். பித்தத்தைக் கட்டுப்படுத்துவதால், அதன் எதிர்க் குணமான உடலில் கபத்தின் தன்மை அதிகரிக்கிறது. அதனால்தான், பழையது சாப்பிட்டதும் நமக்குக் குளுமையான உணர்வு ஏற்படுகிறது.
   சுருங்கச் சொன்னால், 'ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டையும் போக்கும்’ '' என்கிறார் திருநாராயணன்.

Thursday, 24 April 2014

மலச்சிக்கல்

நமது உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு நல்ல உடல் உழைப்பும் பசியும் மற்றும் செரிமானமும் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் மலச்சிக்கல் இருக்காது. வாழ்நாளில் ஒரு தடவையாவது மலச்சிக்கல் உண்டாகாமல் யாருமே இருக்க மாட்டார்கள். மலச்சிக்கலுடனேயே பலர் வாழ்ந்து கொண்டும் இருகின்றனர். 

சித்தர்களின் கூற்றுப்படி ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பேதி மருந்து சாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்தல், உப்பு நீர் கலந்து குடித்து வாந்தி, பித்த வாந்தி எடுத்தல் மனித ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.

மலச்சிக்கலால் மூலநோய் மட்டுமில்லாமல் உடல் சோர்வு, வாய்வுத் தொல்லை, தலைவலி, பசியின்மை, து}க்கமின்மை, உடல் நாற்றம், சிறுகுடல் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறு குடல் புற்று நோய் போன்ற பல நோய்ககள் வர வாய்ப்புகள் உள்ளன.

மலச்சிக்கலை தவிர்க்க மலம் கழிப்பதற்கு முன்பு, தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டில் திருப்பும் கழுத்துப் பயிற்சி, முன்புறமாக குனிந்து பாதங்களைத் தொடுதல், தோப்புக்கரணம் போன்ற பயிற்சிகள் செய்தால் எந்த சிக்கலும் இல்லாமல் மலம் வேகமாக வெளியேறும்.

வாரம் ஒரு முறை உடல் முழுவதும் நல்லலெண்ணை தேய்த்து குளித்தல், தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை, (முருங்கை கீரை மிக நல்லது) பச்சை காய்கறிகள், பழங்கள் வகையை சேர்த்துகொள்ளுதல் போன்ற பழக்கங்கள் மலச்சிக்கல் வராமல் தடுக்கும் . . இரவில் பாஸ்ட் புட் மற்றும் பரோட்டா போன்ற துரித வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். உடலின் மொத்த வியாதிக்கும் மலச்சிக்கலே காரணமாகி விடும்.

நமது வாழ்கையின் முற் பகுதி முழுவதும் பணம் பணம் என்று உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே கழித்து, பிற் பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க மிக சுலபமான பயிற்சிகள், உணவுப் பழக்கவழக்கங்களை கையாண்டாலே போதும்... 

Saturday, 15 March 2014

மண்பாண்ட மகிமை...!

மண்பாண்ட மகிமை...!
“மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.
மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.
வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும். பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.
எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.
ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும்.
இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே!

Tuesday, 14 January 2014

பழைய சாதத்தில் பலம் இருக்கு...!

பழைய சாதத்தில் பலம் இருக்கு...!

முதல் நாள் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் நாம் சாப்பிடும் இந்த பழைய சாத்தில் தான் பி6 பி12 அதிகமாக இருக்கிது என் கூறுகின்றனர் அமெரிக்க மருத்துவர்கள். குறிப்பாக நமது உடலின் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நமது உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்.

பொதுவாக கிராமத்தில் கஞ்சி சாப்பிடும்போது கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தான் வழக்கம். சிறிய வெங்காயத்தை சேர்த்து சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் வைரஸ் காய்ச்சல் என எந்த ஒரு காய்ச்சலும் நம்மை அணுகாது. பழைய சாதத்தில் என்ன பயன் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

இரவு வேளையில் தண்ணீர் ஊற்றி வைப்பதால் சாதத்தில் அதிகளவு நல்ல பாக்டீரியாக்கள்உருவாகுகிறது. இதனை காலை வேளை உணவாக எடுத்துக்கொள்வதால் உடல் லேசாகவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. மேலும் உடல் சூட்டை தணிப்பதோடு குடல்புண், வயிற்றுவலி, போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.. இந்த பணியோடு நின்றுவிடாமல் நார்ச்சத்து, மலச்சிக்கல், பிரச்சனைகளை தீர்த்து உடலை சீராக இயங்கச் செய்கிறது..

உடலை சோர்விலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக இயங்கச்செய்யும். அதற்காக சூடாக தயாரித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி சாப்பிடக்கூடாது. முதல் நாள் இரவு மீந்த சோற்றை எடுத்து நல்ல தண்ணீர் ஊற்றி முடிவிட வேண்டும். மறுநாள் சாப்பிடும் முன் சாதத்தை நன்கு பிழிந்து மோர் சேர்த்து வெங்காய் வைத்து சாப்பிடலாம்.