Showing posts with label உடல். Show all posts
Showing posts with label உடல். Show all posts

Wednesday, 6 May 2015

இயற்கை பேஸ்ட்கள்

உங்கள் பற்கள், ஆரோக்கியமாகவும்
வெண்மையாகவும் இருக்க, சூப்பரான
இயற்கை பேஸ்ட்கள்
************************************************************

பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்க
ளை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால்
மட்டும் பற்கள் சுத்தமாகி விடுமா என்ன?
பற்களை சுத்தப்படுத் தும் பேஸ்ட்களை மட்டும்
பயன்படுத் தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என்
று நினைக்க வேண்டாம். எப்போதும்
செயற்கை பொருட்களை விட இயற்
கை பொருட்களுக்கு நிறைய மகத்து வம் உள்ளது.
அதேப்போல்தான் பற்களை துலக்கவும் ஒரு சில
சூப் பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அந்த
பொருட்கள் அனை த்தும் அன்றாடம் வீட்டில்
பயன்படுத்தும் பொருட்கள்தா ன்.
அது என்னவெ ன்று பார்ப்போமா!!!

வேப்பங்குச்சி

இது ஒரு பழங்கால முறை. இன் றும்
கிராமப்பகுதிகளில் மக்கள் வேப்ப ங்குச்சியைப்
பயன்படுத்திதான் தங்க ள் பற்களை துலக்குகின்றனர்.
அத னால் தான், அவர்கள் பற்கள் இன்று ம் உறுதியாக
இருக்கிறது. ஏனெனில் வேப்பங்குச்சியில் நிறைய
ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பயோடிக் பொருள்
இருக்கிறது. மேலும் இத னைக்
கொண்டு பற்களை துலக்கி னால், பற்கள்
நன்கு சுத்தமாக பளிச் சென்று, துர் நாற்றம்
நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராம
லும் இருக்கும். ஆகவே வேப்பங்குச்சியை
கொண்டு பற்களை துல க்க, முதலில் அந்த
குச்சியை உடைத்து,
அதன்ஒரு முனையை நன்கு மென்று, பின் தேய்க்க
வேண்டும்.

உப்பு

உப்பைக் கொண்டும் பற்களை துலக்க லாம். ஏனெனில்
இதில் சோடியம் அதிக ம் உள்ளது. இதனால் பற்களில்
உள்ள அழுக்குகள் போவதோடு, ஈறுகளும்
ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பற் களில்
வலிகள் ஏற்பட்டால், அப்போது இதனைக்
கொண்டு பற்களை துலக்க லாம். மேலும்
இது வாய்துர்நாற்றத்தை ஏற்படாமலும் தடுக்கும்.
ஆகவே தினமு ம் ஒரு டீஸ்பூன் உப்பை எடுத்துக்
கொண்டு, பற்களை துல க்குங்கள், பின் பாருங்கள்
அதன் நன்மை எப்படி இருக்கிறதென்று.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயை வைத்து பற்களைதுலக்கினா
ல், பற்கள் நன்கு வெள்ளையாக காணப்படும்.
இது வும் பற்களை துலக்க ஒரு சிறந்த முறை.
அதற்கு அரை டேபிள் ஸ்பூன்
கடுகு எண்ணெயோடு,
சிறி து உப்பை சேர்த்து கலந்து, பற்களை துலக்க
வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் அதிகமான அளவு வைட்டமி ன்
சி உள்ளது. இது பற்கள் மற்றும்
ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கும். பொதுவாக
இந்த எலுமிச்சை எத்தகையஅழுக்குகள் என்றாலும்
நீக்கிவிடும், அத்தகையது பற்களில் உள்ள
அழுக்குகளை நீக்காமலா இருக்கும்.
ஆகவே அதற்கு தினமும்
எலுமிச்சை சாற்றை வைத்து பற்களை மற்றும்
ஈறுகளை தேய்க்க வேண்டு ம். பின் பாருங்கள் வாய்
புத்துணர்ச்சியு டன் இருக்கும்.

கிராம்பு

கிராம்பில் நிறைய மருத்துவ குணங் கள்
அடங்கியுள்ளன. அத்தகைய கிரா ம்பு பற்களும்
மிகவும் சிறந்தது. ஆக
வே சிறிது கிராம்பு பொடியை வைத்து பற்களை தேய்க்க
வேண்டும். இதனா ல் பற்கள் வெள்ளையாக
இருப்பதோ டு, பற்களில் வலிகள் ஏற்பட்டால், அத
னை சரி செய்துவிடும்.

ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்க,
மேற்கூறிய பொருட் களையெல்லாம்
பயன்படுத்துங்கள், பற்கள் நன்கு பளிச்சென்று மின்

Thursday, 24 April 2014

மலச்சிக்கல்

நமது உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு நல்ல உடல் உழைப்பும் பசியும் மற்றும் செரிமானமும் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் மலச்சிக்கல் இருக்காது. வாழ்நாளில் ஒரு தடவையாவது மலச்சிக்கல் உண்டாகாமல் யாருமே இருக்க மாட்டார்கள். மலச்சிக்கலுடனேயே பலர் வாழ்ந்து கொண்டும் இருகின்றனர். 

சித்தர்களின் கூற்றுப்படி ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பேதி மருந்து சாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்தல், உப்பு நீர் கலந்து குடித்து வாந்தி, பித்த வாந்தி எடுத்தல் மனித ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.

மலச்சிக்கலால் மூலநோய் மட்டுமில்லாமல் உடல் சோர்வு, வாய்வுத் தொல்லை, தலைவலி, பசியின்மை, து}க்கமின்மை, உடல் நாற்றம், சிறுகுடல் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறு குடல் புற்று நோய் போன்ற பல நோய்ககள் வர வாய்ப்புகள் உள்ளன.

மலச்சிக்கலை தவிர்க்க மலம் கழிப்பதற்கு முன்பு, தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டில் திருப்பும் கழுத்துப் பயிற்சி, முன்புறமாக குனிந்து பாதங்களைத் தொடுதல், தோப்புக்கரணம் போன்ற பயிற்சிகள் செய்தால் எந்த சிக்கலும் இல்லாமல் மலம் வேகமாக வெளியேறும்.

வாரம் ஒரு முறை உடல் முழுவதும் நல்லலெண்ணை தேய்த்து குளித்தல், தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை, (முருங்கை கீரை மிக நல்லது) பச்சை காய்கறிகள், பழங்கள் வகையை சேர்த்துகொள்ளுதல் போன்ற பழக்கங்கள் மலச்சிக்கல் வராமல் தடுக்கும் . . இரவில் பாஸ்ட் புட் மற்றும் பரோட்டா போன்ற துரித வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். உடலின் மொத்த வியாதிக்கும் மலச்சிக்கலே காரணமாகி விடும்.

நமது வாழ்கையின் முற் பகுதி முழுவதும் பணம் பணம் என்று உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே கழித்து, பிற் பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க மிக சுலபமான பயிற்சிகள், உணவுப் பழக்கவழக்கங்களை கையாண்டாலே போதும்... 

Wednesday, 12 December 2012

உடல்: உங்களுக்குத் தெரியுமா? - சுவையான தகவல்கள்!



செல்களுக்குத் தேவை உணவு,பிராணவாயு, நீராதாரப் புறச்சூழ்நிலை. இவை இருந்தால்தான் செல்கள் இருக்க முடியும். உணவு, மற்றும் தண்ணீரை உடலில் உள்ள ரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் வழங்குகின்றன, இவைதான் கழிவுகளையும் வெளியேற்றுகிறது. செல்களுக்குத் தேவையான ரசாயங்கள் மற்றும் உணவுப்பொருட்களை தாங்கியுள்ளது ரத்தமாகும்.

ஈக்கள் ஒரு வினாடியில் 200 பிம்பங்களைப் பார்க்க முடியும். அதனால் ஒரு சினிமா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் ஆனால் எல்லாம் நகராத பிம்பங்களாகவே தெரியும். இதனால்தான் ஈக்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில்லையோ?

நீருக்குள் வாழும் உயிரினங்கள் உதாரணமாக மீன் போன்ற உயிரினங்களுக்கு மனிதர்களுக்கு இருப்பது போல் நுரையீரல்கள் கிடையாது. மூச்சு உறுப்பாக அவர்ற்றிற்கு இருப்பதன் பெயர் 'கில்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. தண்ணீரிலிருந்து ஆக்சிஜனை இவை எடுக்க முடியும்.

நமது ஜீரண அமைப்பு என்பது ஒரு நீளமான டியூப் போன்ற அமைப்பாகும். வாயின் உட்பகுதியிலிருந்து துவங்கி ஆசனாவாய் வரை நீண்ட டீயூப் ஆகும். பெரியவர்களுக்கு இது நீளமானது இதனால்தான் உணவுப்பொருட்கள் இதன் வழியாகச் செல்ல 10 முதல் 20 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும்.

நாம் தினமும் 3 லிட்டர் தண்ணீரை உடலிலிருந்து இழக்கிறோம், அதாவது சிறுநீர், வேர்வை, நமது மூச்சின் மூலமும் இழக்கிறோம். மேலும் வேர்வையில் கூடுதல் உப்பையும் இழக்கிறோம். அதே போல் நாம் மூச்சை வெளியே விடும்போது கரியமிலவாயுவின் வேஸ்ட்டை வெளியேற்றுகிறோம்.

குளிரெடுக்கும்போது நம் உடல் நடுங்குகிறதன் காரணம் தெரியுமா? மூளைக்கு அடியில் இருக்கும் 'ஹைபோதலாமஸ்' என்ற ஒன்று உஷ்ணம் குறைவாக இருப்பதை உணர்கிறது. உடனே தைராய்டு சுரப்பிற்கு செய்தி அனுப்புகிறது. உடனே தைராய்டு சுரப்பி மெடபாலிக் விகிதத்தை அதிக்ரிக்கிறது. உடனே உடற்தசைகள் சுருங்கி விரிகிறது. இதன் மூலம் உஷ்ணம் உருவாக்கப்படுகிறது. நரம்புகள் உடனே சருமத்திற்கு செய்தி அனுப்புகிறது. உடனே சருமத்தின் துளைகள் சுருங்குகிறது, இதன் மூலம் உஷ்ணத்தை உடலுக்குள் பாதுகாக்கிறது.

கணினிகள் சில வினாடிகளில் மில்லியன் கணக்கில் வித்தியாசமான பலவேலைகளை ஒரே நேரத்தில் செய்து விடுவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். ஆனால் நம் மூளை கம்ப்யூட்டரைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வேகம் கொண்டது. ஒவ்வொரு வினாடியும் உடலுக்கு மூளை பில்லியன் கணக்கில் சிறுசிறு சிக்னல்களை அனுப்பிக் கொண்டேயிருக்கிறது. இதன் மூலம் உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.