Tuesday, 8 July 2014

மருத்துவ குறிப்புகள்

ரத்த அழுத்தம், நெஞ்சு சளிக்கு 
பூண்டு நல்ல மருந்து!

இஞ்சி, பூண்டு இல்லாம எங்க வீட்டுல சமையலே இல்லைன்னு பலபேர் சொல்றதை கேள்விப்பட்டிருக்கேன். அதெல்லாம் சரிதான். ஆனா அதே இஞ்சியையும், வெள்ளைப்பூண்டையும் தனிப்பட்ட வகையில சாப்பிட்டு பாருங்க. அதுக்குள்ள மகிமையே தனிதான்.

ஹைபிரஷர்னு சொல்லக்கூடிய உயர் ரத்த அழுத்தத்துக்கு இந்த பூண்டு நல்ல மருந்து. தினமும் வெள்ளைப்பூண்டை வேக வச்சோ, தீயில சுட்டோ சாப்பிட்டு வரலாம் ஹைபிரஷர் குறையுறதோட இதயத்துக்கு நல்லது. ரத்தக்குழாய்ல படியக்கூடிய கொழுப்பையும் வெளியேத்திரும். சிலபேர் பச்சையா சாப்பிடுவாங்க. அது நல்லதில்ல. பச்சையா சாப்பிட்டா அதிக பலன் கிடைக்கும்னு நினைக்காதீங்க. அதுல உள்ள ஆசிட் நேரடியா வயித்துக்குள்ள போனா வயித்துல பிரச்சினையை உண்டுபண்ணும். எதை எப்பிடி சாப்பிடணும்னு ஒரு வரைமுறை இருக்கு.

பூண்டுச்சாறோட தண்ணி சேர்த்து சாப்பிடலாம். காலரா, நிமோனியா காய்ச்சல் வந்தா பூண்டுச்சாறோட தண்ணி கலந்து குடிச்சிட்டு வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வயிறு உப்புசம், பக்கவாதம், இதயநோய், வயித்துவலி மாதிரி பல நோய்களுக்கு வெள்ளைப்பூண்டு நல்ல மருந்தாகும்.

நெஞ்சு சளி பிடிச்சா 50 மில்லி பால், 50 மில்லி தண்ணியில 10, 12 பூண்டுப்பல்லை உரிச்சிப்போட்டு வேக வைக்கணும். நல்லா வெந்ததும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள், தேவையான அளவு பனங்கல்கண்டு இல்லைனா சர்க்கரை சேர்த்து அடுப்பில இருந்து இறக்கணும். சூடு ஆறினதும் பருப்பு கடையுற மத்தை வச்சி நல்லா கடைஞ்சி ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிட்டு வந்தா சளி தொந்தரவு வந்த வழியைப்பார்த்து போயிரும்.

வாய்வுக்கோளாறு உள்ளவங்க முழு வெள்ளைப்பூண்டை தீயில சுட்டு சாப்பிட்டுட்டு வந்தா நிச்சயமா பலன் கிடைக்கும்.

மருத்துவ குறிப்புகள்

ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் நெல்லிக்காயின் மகத்துவம் தெரியுமா?

ஆன்மிக மகத்துவம்:

ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான். சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர்.

நெல்லிக்கு ஹரிப்ரியா என்றும் பெயர் உண்டு. ஏகாதசியன்று நெல்லி இலை மற்றும் நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்ப் பொடி) இடப்பட்ட நீரில் குளித்து, விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு. நெல்லிமரம் வளரும் வீட்டினைத் தீய சக்திகள் நெருங்காது, துர்மரணம் நிகழாது. அந்த வீடு லட்சுமி கடாட்சத்துடன் விளங்கும்.

நெல்லிக் கனியை நிவேதனம் செய்வதாலும் அதன் இலைகளால் அர்ச்சிப்பதாலும் மகாவிஷ்ணு மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். துவாதசி நாளில் ஏகாதசிவிரதத்தினை பூர்த்தி செய்து நெல்லிக்கனியை உண்பது அவசியம். இதனால் கங்கையில் நீராடிய பலனும், காசியில் வசித்த பலனும் கிட்டும். வெள்ளிக் கிழமைகளில் நெல்லி மரத்தினை வலம் வந்து வழிபடுபவர் திருமகளின் திருவருளைப் பெறுவர்.

அறிவியல் மகத்துவம்:

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும், இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் புத்தி, வீர்யம் குறைந்து விடும்.

இயற்கை மருத்துவ குறிப்புகள்

இயற்கை மருத்துவ குறிப்புகள்
--------------------------------------

• மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.

• வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டால் கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் கிடைக்கும்.

• பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.

• திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம்.

Thursday, 3 July 2014

நல்ல ஆரோக்கியம்


தெய்வவழிபாட்டுடன், உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் செய்து நல்ல சிந்தனைகளோடு வாழ்ந்தால் நோய் நொடிகள் நம்மை அண்டாது. அளவான உணவு, நிறைவான தியானம், சுயநலமில்லாத பக்தியோடு இறைவனை வழிபட்டு வந்தால் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் ஆனந்தமாக வாழலாம்!