Sunday, 23 December 2012

ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு!

ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு!
உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உணவு உண்ணும் முறை:
உடலில் இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.
துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.

இனிப்பு:
மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும்.
பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.

புளிப்பு:
உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும்.
எலுமிச்சை, புளிச்ச கீரை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.

காரம்:
பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.
மிளகாய், மிளகு, வெங்காயம், பூண்டு, இஞ்சி, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.

கசப்பு:
பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.
பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு:
அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும்.
கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.

துவர்ப்பு:
உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும்.
வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.

உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக் கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பு.
முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.

இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசாயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.

ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.

எப்போதும் உணவ உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.

எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக் கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப் படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.

உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.

நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.

'உண்பது நாழி' என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் போது உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.

Wednesday, 12 December 2012

உடல்: உங்களுக்குத் தெரியுமா? - சுவையான தகவல்கள்!



செல்களுக்குத் தேவை உணவு,பிராணவாயு, நீராதாரப் புறச்சூழ்நிலை. இவை இருந்தால்தான் செல்கள் இருக்க முடியும். உணவு, மற்றும் தண்ணீரை உடலில் உள்ள ரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் வழங்குகின்றன, இவைதான் கழிவுகளையும் வெளியேற்றுகிறது. செல்களுக்குத் தேவையான ரசாயங்கள் மற்றும் உணவுப்பொருட்களை தாங்கியுள்ளது ரத்தமாகும்.

ஈக்கள் ஒரு வினாடியில் 200 பிம்பங்களைப் பார்க்க முடியும். அதனால் ஒரு சினிமா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் ஆனால் எல்லாம் நகராத பிம்பங்களாகவே தெரியும். இதனால்தான் ஈக்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில்லையோ?

நீருக்குள் வாழும் உயிரினங்கள் உதாரணமாக மீன் போன்ற உயிரினங்களுக்கு மனிதர்களுக்கு இருப்பது போல் நுரையீரல்கள் கிடையாது. மூச்சு உறுப்பாக அவர்ற்றிற்கு இருப்பதன் பெயர் 'கில்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. தண்ணீரிலிருந்து ஆக்சிஜனை இவை எடுக்க முடியும்.

நமது ஜீரண அமைப்பு என்பது ஒரு நீளமான டியூப் போன்ற அமைப்பாகும். வாயின் உட்பகுதியிலிருந்து துவங்கி ஆசனாவாய் வரை நீண்ட டீயூப் ஆகும். பெரியவர்களுக்கு இது நீளமானது இதனால்தான் உணவுப்பொருட்கள் இதன் வழியாகச் செல்ல 10 முதல் 20 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும்.

நாம் தினமும் 3 லிட்டர் தண்ணீரை உடலிலிருந்து இழக்கிறோம், அதாவது சிறுநீர், வேர்வை, நமது மூச்சின் மூலமும் இழக்கிறோம். மேலும் வேர்வையில் கூடுதல் உப்பையும் இழக்கிறோம். அதே போல் நாம் மூச்சை வெளியே விடும்போது கரியமிலவாயுவின் வேஸ்ட்டை வெளியேற்றுகிறோம்.

குளிரெடுக்கும்போது நம் உடல் நடுங்குகிறதன் காரணம் தெரியுமா? மூளைக்கு அடியில் இருக்கும் 'ஹைபோதலாமஸ்' என்ற ஒன்று உஷ்ணம் குறைவாக இருப்பதை உணர்கிறது. உடனே தைராய்டு சுரப்பிற்கு செய்தி அனுப்புகிறது. உடனே தைராய்டு சுரப்பி மெடபாலிக் விகிதத்தை அதிக்ரிக்கிறது. உடனே உடற்தசைகள் சுருங்கி விரிகிறது. இதன் மூலம் உஷ்ணம் உருவாக்கப்படுகிறது. நரம்புகள் உடனே சருமத்திற்கு செய்தி அனுப்புகிறது. உடனே சருமத்தின் துளைகள் சுருங்குகிறது, இதன் மூலம் உஷ்ணத்தை உடலுக்குள் பாதுகாக்கிறது.

கணினிகள் சில வினாடிகளில் மில்லியன் கணக்கில் வித்தியாசமான பலவேலைகளை ஒரே நேரத்தில் செய்து விடுவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். ஆனால் நம் மூளை கம்ப்யூட்டரைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வேகம் கொண்டது. ஒவ்வொரு வினாடியும் உடலுக்கு மூளை பில்லியன் கணக்கில் சிறுசிறு சிக்னல்களை அனுப்பிக் கொண்டேயிருக்கிறது. இதன் மூலம் உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை!

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை!

நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது. 

இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர். 

இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.

சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு. 

பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.

இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது.

தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம். 

இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும். 15நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.

Monday, 10 December 2012

நெல்லிக்காய்

உடலுக்கு சக்தியை தரவல்ல நெல்லிக்காய்

நீண்டகாலம் வாழ்ந்து, அவ்வையார் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கில், தனக்கு கிடைத்த அரிய வகை நெல்லிக்கனியை, அவ்வையாருக்கு மன்னர் அதியமான் கொடுத்ததாக வரலாறு உண்டு. இவ்வளவு சிறப்பும், பயனும் உள்ள நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் – சி அதிகம் உள்ள இந்த நெல்லிகாய் உடலுக்கு எனர்ஜியை தரக்கூடியது.

நோய் எதிர்ப்பு சக்தி உடையது. சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்கனியை தொடர்ந்து சாப்பிடலாம். கால்சியம், இரும்பு சத்துள்ள இந்த நெல்லிகாய் தலைமுடியை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமுடி வேர்கள் வலுவாக இருக்க உதவுகிறது. முடி உதிர்வதை தடுக்கிறது. இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இந்த நெல்லிக்காய் பார்வை குறைபாடு ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது. வயிற்றுபோக்கு ஏற்படாமல் தடுக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களும், காய்ச்சல் உள்ளவர்களும் நெல்லிக்காயை உண்ணக் கூடாது என்பார்கள். இது திரிதோஷ சமணி, வாத, பித்த, சிலேத்துமங்களை சமநிலையில் வைக்கக் கூடியது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என்ற மூன்று சுவைகளும் முத்தோஷங்களை சமனப்படுத்தி, உடலைத் தேற்றுகிறது.

உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.

அடங்கியுள்ள சத்துக்கள்

புரதம் – 0.4 கி
கொழுப்பு – 0.5 கி
மாச்சத்து – 14 கி
கல்சியம் – 15 மி.கி
ஸ்பரஸ் – 21 மி.கி
இரும்பு – 1 மி.கி
நியாசின் – 0,4 மி.கி
வைட்டமின் ´பி1` – 28 மி.கி
வைட்டமின் ´சி` – 720 மி.கி
கலோரிகள் – 60

இதுபோன்ற பல்வேறு நன்மைகளை உடைய இந்த நெல்லிக்காய், முதுமையை தடுத்து நம்மை இளைமையாக வைத்திருக்க உதவுகிறது. ஏராளமான பயன்களை கொண்ட நெல்லிக்காய், தாராளமாக கிடைக்க கூடியது. எனவே, நீங்களும் நெல்லிக்காயை விரும்பி சாப்பிடலாமே.

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழம் சாப்பிடுறீங்களா? அப்படி என்னதான் அதுல இருக்கு?

நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது. அதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சரி இப்போது அந்த பழத்தின் வேறு நன்மைகளைப் பார்போமா!!!

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இரவில் படுக்கும் போது பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை சாப்பிட்டால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். ஏனெனில் இந்த பழத்தில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், சரிசெய்துவிடும்.

பார்வை கோளாறு

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கர்ப்பம்

கர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை அனைத்து கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது, இதனை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.

மூட்டு வலி

இன்றைய காலத்தில் மக்கள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடேயாகும். ஆகவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.

குடல் கோளாறு

பேரிச்சம் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி5, நார்ச்சத்து, வைட்டமின் பி3, பாஸ்பரஸ், கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.

பற் சொத்தை

நிறைய பேர் பல் சொத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஃப்ளோரின் என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு இந்த சத்து மிகவும் இன்றியமையாதது.

சீரகத்தின் மருத்துவக் குணங்கள்


சீரகத்தின் மருத்துவக் குணங்கள்

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு.

Wednesday, 5 December 2012

உட்கார்ந்த இடத்திலேயே வேலை!!

உட்கார்ந்த இடத்திலேயே 6 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வதால் இளம் வயதில் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களின் பெரும்பான்மையான வேலைகள் உட்கார்ந்த இடத்திலே செய்யும் அளவிற்கு முடங்கிவிட்டது. இவ்வாறாக வேலை செய்பவர்கள் எண்ணிக்கை உலக அளவில் பெருகி வருகிறது. இது குறித்து, 1.23 லட்சம் பேரை கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அவர்களின் உடல் ஆரோக்கிய நிலைகளையும் கண்காணித்தனர். அதில், உட்கார்ந்த நிலையில் தொடர்ந்து 6 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்பவர்கள் மற்றும் எந்தவொரு உடற்பயிற்சியும் செய்யாதவர்களுக்கு இதய நோய், நீரிழிவு, நரம்பு தளர்ச்சி, உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அவ்வாறாக தினசரி 3 மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் பெண்களைவிட, 6 மணி நேரத்துக்கு மேல் உட்காந்து இருக்கும் 40 சதவீதம் பெண்களின் ஆயுள் குறைய வாய்ப்புள்ளது. அதில் ஆண்களுக்கு 20 சதவீதம் வாய்ப்புள்ளது. உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வதால் இளம் வயதில் இறப்பதற்கான சூழல்கூட ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா இருக்கா? ஈஸியா தடுக்கலாம்!!!

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா இருக்கா? ஈஸியா தடுக்கலாம்!!!

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒருவித எரிச்சல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம் இல்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே அவஸ்தைப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் அடிக்கடி கழிவறைக்கு செல்ல முடியவில்லை என்று வெளியேறும் கழிவுகளை அ
டக்கி வைக்கின்றனர். இதனை சரிசெய்தால் மட்டும், எரிச்சல் ஏற்படுவதை தடுக்க முடியாது. இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரிந்து கொள்வதோடு, அதற்கான வீட்டு மருத்துகளையும் தெரிந்து கொண்டு, பின்பற்றி வந்தால், சிறுநீர் கழித்தப் பின் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம்.

எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்:

* சிறுநீர் பாதை தொற்றுநோய்
* உடலில் நீர் வறட்சி
* சிறுநீரக கற்கள்
* கல்லீரல் பிரச்சனை
* அல்சர்
* பிரசவத்திற்கு முன்னோ அல்லது பின்போ நரம்புகளில் பாதிப்பு இருப்பது
* விந்து அல்லது விரைகளில் உள்ள தொற்றுநோய்
* பால்வினை நோய்
* பெரிதான புரோஸ்டேட்
* நீரிழிவு
* ஊட்டச்சத்துக் குறைவு
* குறுகிய சிறுநீர் பாதை

எரிச்சலைத் தடுக்கும் சிறப்பான வீட்டு மருந்துகள்:

* அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும இருக்கும். ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும். இருப்பினும் எரிச்சலுடன் இருந்தால், அது சிறுநீர் பாதையில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

* குருதிநெல்லிக் கனியின் (cranberry) ஜூஸை சாப்பிட வேண்டும். பெரும்பாலான சிறுநீர் பாதை தொற்றுநோய்கள் மற்றும் குறுகிய சிறுநீர் பாதையினால் ஏற்படும் எரிச்சலை, இந்த சிட்ரஸ் பழத்தின் ஜூஸானது சரிசெய்யும். வேண்டுமெனில் எலுமிச்சை ஜூஸ் கூட குடிக்கலாம். ஏனெனில் சிட்ரஸ் பழ ஜூஸ்கள், பாக்டீரியாவை அழிக்கவல்லது.

* நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம். சொல்லப்போனால், நெல்லிக்காய் பெரும்பாலான ஆயுர்வேத மருந்துவத்தில் நோயை குணமாக்கப் பயன்படுகிறது.

* தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இவற்றை மயக்க நிலை மற்றும் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். வேண்டுமென்றால் அத்துடன் வெல்லம் மற்றும் மல்லி தூளை சேர்த்து குடிக்கலாம். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.

* ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால், சரியாகிவிடும்.

* எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆகவே தினமும் இரண்டு அல்லது மூன்று முறை, கருப்பை வாய்க்குழாய் (vagina) மற்றும் ஆண்குறியை (penis) கழுவ வேண்டும். இதனால் பாக்டீரியாவானது தங்காமல் தடுக்கலாம்.

* சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேறும். ஆகவே பீர் குடித்தால், அந்த கற்கள் கரைந்துவிடும். அதையே காலையில் குடித்தால், உடலில் வறட்சி ஏற்படும். ஆகவே அப்போது அத்துடன் தேங்காய் நீர் மற்றும் அதிக தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும்.

மேற்கூறியவாறெல்லாம் செய்தால், எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம் சரியாகிவிடும். வேறு என்னவெல்லாம் செய்தால், சரியாகும் என்பது உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Monday, 3 December 2012

பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்?


பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்?

நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இவ்வாறு அணிவதன் சிறப்பு..

கொலுசு
: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

மெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

மோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.

மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி. சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.

காதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.

Thursday, 29 November 2012

Website for starting new business

http://smallb.in/

Websites for snacks and food items !!

http://www.4thsensecooking.com
http://showmethecurry.com/
http://en.wikipedia.org/wiki/List_of_Indian_snacks
http://www.sanjeevkapoor.com
http://www.indianfoodforever.com
http://www.tarladalal.com
http://www.manjulaskitchen.com
http://simpleindianrecipes.com

Monday, 26 November 2012

தக்காளியும் உடல் ஆரோக்கியமும் !!

இதைக் காயாகவும் சமைக்கலாம், பழமாகவும் சமைக்கலாம். பச்சையாகவே சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் சாப்பிடுவதற்கு முன் பழத்தைச் சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.

காய் கறிகளில் மிகவும் எளிதிலும் விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன.

மற்றக் காய்களில் சிலவற்றில் ஒன்று அதிகமாகவும் மற்ற இரண்டும் குறைவாகவும் இருக்கும். மற்றும் சிலவற்றில் இரண்டு அதிகமாகவும் ஒன்று குறைவாகவும் இருக்கும். ஆனால் தக்காளிப் பழத்தில் மூன்றும் சரியான அளவில் இருக்கின்றன.

முதலாவது, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம். இது பழத்துக்குப் புளிப்புத் தன்மை தருகிறது.

இரண்டாவது எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, நாரத்தை முதலியவற்றில் இருக்கும் ‘சிட்ரிக்’ அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக் கூடியது.

மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலம். இது நரம்பு நாடி, நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது.

சாதாரணமாக காய்கறிகளைச் செடியிலிருந்து பறித்தவுடன் அதன் பசுமை குறைந்து விடும். ஆனால் தக்காளியோ வாடாமல் பசுமையாக இருக்கும். ஆகையினால் இதன் ருசியும் வெகு நேரம் வரை குறையாமல் இருக்கும்.

சாப்பாட்டில் அரிசி அதிகமாக இருப்பதால் உடம்புக்கு நோய் தான் ஏற்படும். தக்காளி இதற்குச் சிறந்த தடுப்பு, இது உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று, அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது.

தவிர பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.

தக்காளியை, பருப்பு சேர்த்து கறி, கூட்டு, சாம்பார், குழம்பு, ரசம் இத்தனையும் தயாரிக்கலாம். புளிப்புப் பச்சடியாகவோ, இனிப்புப் பச்சடியாகவோ சமைத்து உண்டு மகிழலாம்.

கனிந்த தக்காளிப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்தும் சாப்பிடலாம். தக்காளிச் சாதம், தக்காளி தோசை, தக்காளி இட்லி இப்படியும் தயாரித்து உண்ணலாம். அனைத்தும் வெகு சுவையாயிருக்கும்.

தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது. அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது.

மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.

இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவையும் இருக்கின்றன.

இது சுமார் ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். அதனால் ஜீரண சக்தி குறைவாயுள்ளவர்களுக்குத் தக்காளி ரசம் மிகவும் ஏற்றது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல புஷ்டியான ஒரு சிறந்த உணவு.

தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறது.

கால்சியத்தினால் எலும்பு வளர்ச்சி ஏற்பட்டாலும் மக்னிசியம் சிமெண்டைப் போல் எலும்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது. எலும்புகளும் உறுதிப்பட்டு ஒழுங்காக அமைகின்றன.

குழந்தைகளும் பெரியவர்களும் மக்னீசியம் உள்ள தக்காளியோடு கூட, கால்சியம் உள்ள பால் தயிர் முதலியன உட்கொள்வது மிகவும் அவசியம்.

அதனால் தக்காளி தயிர்ப்பச்சடி செய்து அவ்வப்போது உண்டு வரலாம்.

வைட்டமின் ‘சி’ குறைவு காரணமாக உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்படும். சக்தியும் குறையும், பல்லும் ஈறும் பலவீனப்படும். உடம்பு வளராமல் குள்ளமாகவே மனிதன் நின்றுவிடுவான். இதையெல்லாம் போக்கக் கூடிய வைட்டமின் ‘சி’ தக்காளியில் அதிக அளவில் கிடைக்கிறது.

மற்றும் வைட்டமின் ‘பி’யும் ‘சி’யுங்கூட இதில் இருக்கின்றன. சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் ‘டி’கூட இருக்கிறது.

தக்காளியில் இத்தனை நல்ல குணங்கள் இருப்பதால் கூடுமானவரைப் பெரியோர்களும் வளரும் குழந்தைகளும் நிறைய தக்காளி சாப்பிடுவது நல்லது.

டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு!


ஜலதோஷ‌ம், அறிவியல் வளர்ச்சியால் ஆக்கப்பூர்வமான விஷயங்க‌ள் நிறைய நிகழ்ந்து வருகின்றபோதிலும் அழிவுக‌ள்... குறிப்பாக புதிதுபுதிதாக நோ‌ய்க‌ள் வந்து மனிதர்களை பாடா‌ய்படுத்தி வருவது குறித்து நான் எழுதியது ஏற்கனவே இந்த இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் எனக்கு வந்த நோ‌ய் மற்றும் குறைபாடுகளுக்கு நான் செ‌ய்து கொண்ட வைத்தியம் பற்றி அனுபவப்பூர்வமாக எழுதியிருந்தேன். அந்த வரிசையில இன்னும் நிறைய அனுபவ வைத்தியம் இருக்கு, அதை சொல்றேன், பாருங்க... பலனை நீங்களும் அனுபவியுங்க!

வெயில்ல அலைஞ்சு திரிஞ்சுட்டு வீட்டுக்கு நுழைஞ்சவுடனே ஐஸ்வாட்டர‘மடக் மடக’குனு குடிக்கிறவங்க நிறையபேர் இருக்கிறாங்க. இப்பிடி குடிக்கிறதால சிலருக்கு ஒண்ணும் செ‌ய்யாது. ஒருசிலருக்கு கிண்ணுனு தலையில பிடிக்கும், கொஞ்சநேரத்துல தலைவலி, தொண்டை கரகரப்பு, தும்மல் வந்து ஜலதோஷம் ஆரம்பிக்கும். ஜலதோஷம் இப்பிடி ஐஸ்வாட்டரை குடிக்கிறதுனாலதான் வரும்னு சொல்ல முடியாது. எந்த வழியிலயும் வரலாம். தயிர், மோர் சாப்பிடுறதுனாலயும், ஜூஸ் குடிக்கிறதுனாலயும், மழையிநனையிறதுனாலயும், பூசணிக்கா‌ய் சாப்பிடுறதுனாலயும்கூட சிலபேருக்கு ஜலதோஷம் வரலாம்.

எது எப்படியோ? ஜலதோஷம் வர்றதுக்கான அறிகுறி தெரிஞ்சவுடனே பொறுக்குற சூட்டுல உ‌ள்ள வெந்நீரை (சுடுதண்ணி) குடிச்சாலே போதும். ஜலதோஷம் பிடிக்காது. அதையும்மீறி வந்துட்டா மணத்தக்காளி கீரை சூப் குடிங்க. லேசா தொண்டை கரகரப்பு இருந்தா வெதுவெதுப்பான தண்ணியில கல் உப்பை போட்டு கலந்து தொண்டை கொப்புளிங்க. காலையில கண்முழிச்சதும் செ‌ய்யுங்க, ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடியும் செ‌ய்யுங்க போதும். மத்தபடி மழைக்காலங்க‌ள்ல மூக்கடைப்பு, ஜலதோஷம்னு வந்து பாடா‌ய்ப்படுத்தும். மூக்கடைப்பு விலகணுன்னா மஞ்சளை (குச்சி மஞ்ச‌ள்/குழம்பு மஞ்ச‌ள்) நல்லெண்ணையில நனைச்சி தீயில சுடுங்க. அப்போ வரக்கூடிய புகையசுவாசிச்சா போதும். இதேமாதிரி மிளகை தீயில சுட்டு அதோட புகையை சுவாசிக்கலாம்.

நொச்சி இலையை தண்ணியில போட்டு கொதிக்க வச்சஅதோட ஆவியை சுவாசிக்கலாம். வேப்பிலையும், மஞ்ச‌ள்தூளும் போட்டு கொதிக்க வச்சு அதோட ஆவியை மூக்கால சுவாசியுங்க. நிச்சயம் மூக்கடைப்பு விலகும். நச்சு...நச்சுனு சிலபேர் தும்மல் போடுவாங்க. தினமும் காலையில கண் விழிச்சி தண்ணியில முகத்தை கழுவினா போதும். விடாம தும்மல் போடுவாங்க. இந்தமாதிரி தும்மல் வந்தா தேங்கா‌ய் நாரை (தேங்கா‌ய் ஓட்டின்மீது‌ள்ள சவுரி) தீயில் எரித்து அதன் புகையை உ‌ள்ளிழுத்தால் தும்மல் அடங்கிவிடும். இதை எப்போதாவது செ‌ய்யலாம். அடிக்கடி செ‌ய்யக்கூடாது.

இந்த மாதிரி நேரங்க‌ள்ல தலைவலியும் வந்து பாடா‌ய்படுத்தும். அதுக்கு ஈஸியான வைத்தியம் இருக்கு. சுக்கை தண்ணி விட்டு உரசி (இழைத்து)கொழகொழனு எடுத்துக்கோங்க. அதை நெத்தியில பத்து போட்டா அஞ்சு நிமிஷத்துல தலைவலி பறந்து போயிரும். சிலபேருக்கு தலை கனத்து ஏதோ பாரத்தை தலையில தூக்கி வச்ச மாதிரி இருக்கும். அப்பிடிப்பட்ட நேரங்க‌ள்ல தலையணையில நொச்சிஇலையை வச்சி தூங்கினா பாரம் இறங்கி நிம்மதியான தூக்கம் வரும். ஜலதோஷம் நீடிச்சிதுன்னா சளி பிடிச்சிக்கிட்டு மனுசனை உண்டு இல்லைனு ஆக்கிரும். இந்த மாதிரி நேரங்க‌ள்ல பூண்டுப்பால் ரொம்பநல்லா கைகுடுக்கும். பூண்டுப்பால்னா என்னன்னு நீங்க கேக்குறது எனக்கு புரியாம இல்லை. பசும்பால்ல ஒரு முழு பூண்டை உரிச்சுப்போட்டு நல்லா வேக வைக்கணும். அதை அடுப்புல இருந்து கீழ இறக்குறதுக்கு முன்னாடி மிளகுத்தூ‌ள், மஞ்ச‌ள்தூ‌ள் போடணும். முடிஞ்சா அதை ஒரு கடைசல் கடைஞ்சி பனங்கல்கண் டு போட்டு ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிடணும்.

பூண்டுப்பால் ராத்திரி சாப்பிடலாம், அதேபோல பூண்டுக்குழம்பும் சளி பிரச்சனைகளுக்கு ரொம்ப நல்லது. சின்ன வெங்காயத்தை மதிய சாப்பாட்டோட சேர்த்துக்கிட்டா சளி பிரச்சினைக்கு கைகொடுக்கும். மிளகுத்தூளை சுடுசோத்துல நெ‌ய் சேர்த்து சாப்பிடலாம். காலை நேரத்துல இஞ்சிச்சாறு, இஞ்சி ஜூஸ் குடிக்கலாம். இஞ்சிச்சாறு எடுத்ததும் அதை வடிகட்டி வச்சிரணும். அஞ்சு நிமிஷம் கழிச்சி பார்த்தா அடியில வெ‌ள்ளையா ஒண்ணபடியும். நச்சுப்பொரு‌ள். அது இல்லாம மேல தெளிஞ்ச நீரை மட்டும் குடிக்கணும். இஞ்சி ஜூஸ் எப்பிடி எடுக்கணுன்னா இதே இஞ்சி சாறோட எலுமிச்சை சாறு, சீனி (சர்க்கரை), தேன் சேர்த்து குடிக்கணும்.

முக‌ப்பரு வராம‌ல் தடு‌க்க...

துளசி சாற்றை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் கழுவி விட்டால் முகப் பரு தொல்லை ஏற்படாது.

முகப்பரு இருப்பவர்கள் வேப்பமரப் பட்டையை வெண்ணையில் அரைத்துத் தடவுவது நல்லது. மஞ்சளை, கறி வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால் முகப்பரு மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் மறையும்.

மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பது நல்லது. இப்படி தொடர்ந்து செய்வதால் கன்னத்தின் அழகு அதிகரிக்கும்.

சந்தனம், மஞ்சள் போன்றவற்றை பொடியாக்கி முகத்தில், கை, கால்களில் தடவலாம். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பால், வெண்ணை கலந்து குழைத்துப் பூச வேண்டும்.

எ‌ண்ணெ‌ய்த் தன்மை கொண்ட சருமத்தை உடையவர்கள் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து உடலில் பூசலாம்.

கொத்துமல்லி, கறிவேப்பிலை வாடாம‌ல் இருக்க...

கொத்துமல்லி, கறிவேப்பிலை வாடாம‌ல் இருக்க...

பழைய பால்குக்கரில் பக்கவாட்டில் தண்ணீர் ஊற்றி அதில் பச்சைமிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றைப் போட்டு வைத்தால் இரண்டு மூன்று நாட்களுக்குப் பசுமையாக இருக்கும்.

சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க...

மிக்ஸர், ஸ்வீட்டுகள், சர்க்கரை இவற்றில் எறும்பு வராதிருக்க, பில்லைக் கற்பூரம் (10 அடங்கிய) பாக்கெட் ஒன்றைப் போடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

மோர்க்குழம்புக்கு அரைக்கும்போது...

மோர்க்குழம்புக்கு அரைக்கும்போது, ஒரு தக்காளி, கொஞ்சம் கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கி அரைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

வீட்டிலேயே பாசந்தி செய்ய...

வீட்டிலேயே பாசந்தி செய்வதற்கு, தினமும் கொஞ்சம் பால் ஏடு வீதம் எடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டே வர வேண்டும். ஒரு நாள் பாலை சுண்டக்காய்ச்சி ஏலப்பொடி, குங்குமப்பூ, சாரப்பருப்பு இவற்றைப் போட்டால் பாசந்தி மணக்கும் சுவைக்கும்.

பூரி உப்பலாக இருக்க...

பூரி இடும்போது மெல்லிசாய் இடாதீர்கள். அப்படிச் செய்தால் பூரி உப்பிக் கொண்டு வர வாய்ப்பே இல்லை. தடிமனான பூரிகள் மட்டுமே நன்கு உப்பும்.

விஷ‌த்தை மு‌றி‌க்கு‌ம் ‌பிரம‌த்த‌ண்டு!!

பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக் கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட, பேதியாகி பாம்பு விஷம் இறங்கும்.

பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ கடுப்பு நீங்கும்.

பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள், குட்டம் குணமாகும்.

பிரமத் தண்டு இலையை அரைத்துக் கட்டிவரக் கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு, உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் குணமாகும்.

பிர‌ம த‌ண்டு பூக்களை 20 எடுத்து நீரில் ஊற வைத்து குளித்து வர 50 நாட்களில் கண் நோய் குணமாகும்.

Webdunia

எலும்பை பலப்படுத்தும் அகத்தி!

அகத்திக்கீரையோட மகத்துவம் நமக்கு பலபேருக்கு தெரியாது. இதுல வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் இருக்குது. சாம்பார், கூட்டு, பொரியல் செஞ்சி இந்த கீரையை சாப்பிட்டு வந்தீங்கனா எலும்பு நல்லாவே வளரும். வயசான காலத்துல சிலபேருக்கு இடுப்பு எலும்பு பலமில்லாம முன்பக்கமோ, பின்பக்கமோ வளைஞ்சி நடக்கவே கஷ்டப்படுவாங்க.

இந்தமாதிரி பிரச்சினைகளை தவிர்க்கவும்னா அடிக்கடி அகத்திக்கீரை சாப்பிடவும். இது வாயுவை உண்டாக்குற கீரையா இருந்தாக்கூட அதோட பெருங்காயம், வெ‌ள்ளைப்பூண்டு சேர்த்து சமைச்சா வாயு விலகிப்போயிரும். அகத்திக்கீரையில அவ்வளவு விஷயம் இருக்கு.

அரைக்கீரையை தினமும் சாதத்தோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்கனா உடம்புல நல்ல பலம் ஏறும். கல்யாணமான ஆண்க‌ள் அரைக்கீரையோட வெங்காயம் சேர்த்து நெ‌ய்யில பொரிச்சி சாப்பிட்டு வந்தா புது ரத்தம் ஊறி தாது அவுக்க‌ள் உற்பத்தியாகி இல்லற வாழ்க்கைக்கு தேவையான சக்தி கிடைக்கும். இத விட்டுப்போட்டு இன்னைக்கி என்னென்னவோ மருந்தையெல்லாம் தேடிப்போயிட்டிருக்காங்க.

குழந்தை பெத்த பொண்வுங்களுக்கு ஒடம்புல போதுமான சக்தி இருக்காது. அவங்க‌ள்லாம் அரைக்கீரையை கடைஞ்சி சாப்பிட்டு வந்தா நல்ல பலம் கிடைக்குறதோட குழந்தைக்கு தேவையான பாலும் சுரக்கும். முருங்கைக்கீரை உங்க வீட்டுலயோ, வீட்டுக்கு பக்கத்திலயோ இருக்கும். ஆனா நாம அதை சீண்டுறதில்ல. அதில இருக்குற மகத்துவம் நமக்கு தெரியாததுதான் காரணம். நிறைய தா‌ய்மார் குழந்தைக்கு பால் கிடைக்குறதில்லனு மனசு சங்கடப்பட்டு ஏதேதோ வைத்தியம் செ‌ய்வாங்க. அவங்கல்லாம் ஏனோ முருங்கைக்கீரையை மறந்திட்டாங்க. முருங்கைக்கீரையை பருப்போடவோ தனியாவோ சமைச்சு சாப்பிட்டு வந்தாலே தேவையான தா‌ய்ப்பால் சுரக்கும். குழந்தைங்களுக்கு சிலநேரம் வயிற்று உப்பிசம் வந்து வீல்வீல்னு கத்தும்.


இந்த மாதிரி பிரச்சினைக்கு முருங்கைக்கீரையை சுத்தம் பண்ணி உ‌ள்ளங்கையில வச்சி நல்லா கசக்கி சாறு எடுத்து வடிகட்டி, அரை ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதோட அரை பட்டாணி அளவு கல் உப்பை கரைக்கவும். அப்புறமா அரை ஸ்பூன் அளவுக்கு வெந்நீர் சேர்த்து கலந்து உ‌ள்ளுக்கு கொடுத்தா வீல் வீல் சத்தம் அடங்கிப்போயிரும். முருங்கைக்கீரையை சுத்தம் பார்த்து நல்லா வேக வச்சி அதோட கோழி முட்டையை உடைச்சிப்போட்டு நல்ல கிளறவும்.

பிறகு சூடு ஆறுறதுக்கு‌ள்ள அதை சாப்பாட்டோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்கனா ஒடம்புல பலம் ஏறும். 40 நா‌ள் விடாம செஞ்சிட்டு வந்தீங்கனா முழு பலனையும் அடையலாம். கொத்தமல்லிக்கீரையை சாம்பார், ரசத்துல ஏதோ வாசனைக்காக சேர்ப்போம். ஆனா தனியா செஞ்சி சாப்பிடுறதில்ல. துவையலாவோ, சாதத்தோட கலந்தோ சாப்பிட்டு வந்தீங்கனா புது ரத்தம் உற்பத்தியாகுறதோட எல்லா சக்தியும் கிடைக்கும்.

வயித்துப்புண்ணால கஷ்டப்படுறவங்க கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும். மூக்கடைப்பு, மூக்குல சதை வளர்ந்து அவதிப்படுறவங்க கொத்தமல்லி துவையலை ஒரு கொட்டைப்பாக்கு அளவு தினமும் சாப்பாட்டுல சேர்த்து வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும். தூதுவேளைக்கீரையை நெ‌ய்யில வதக்கி துவையலாவோ மசியலாவோ சாப்பிட்டு வந்தீங்கனா கபக்கட்டு விலகி உடம்புல வலு ஏறும். அறிவு வளரும்.

தூதுவேளை கீரையை கஷாயமா செஞ்சி கஸ்தூரி, கோரோஜனை மாத்திரை சேர்த்து சின்ன குழந்தைகளுக்கு கொடுத்திட்டு வந்தா சளியினால வர்ற கா‌ய்ச்சல் குணமாகும். டைபா‌ய்டு, நிமோனியா மாதிரி கா‌ய்ச்சல் நேரத்துல கபம் உண்டாகி நெஞ்சுல சளி அடைச்சிக்கிட்டா தூதுவேளைக்கீரையை கொடுத்திட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும் என்கிறார் மூலிகை ஆரா‌ய்ச்சியாளர் தமிழ்குமரன் (9551486617).

Thursday, 22 November 2012

இஞ்சி!!

ஜிஞ்சர் டீ என்று அழைக்கப்படும் இஞ்சி தேநீர் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு ஜீரண சக்தியையும் அதிகரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளொன்றுக்கு ஒரு முறை ஜிஞ்ஜர் டீ அருந்தினாலே போதும், நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.

மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது. இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாக்கின் ருசி சம்பந்தமான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.

இஞ்சியில் ஜிஞ்ஜெரால் என்ற ஒரு சக்தி வாய்ந்த வைட்டமின் உள்ளது. இது நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. அதாவது நமக்கு சொல்லொணா கவலை ஏற்படும்போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்து விடுகிறது.

மலச்சிக்கல், அழற்சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் இவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பைப் போக்க ஜிஞ்ஜர் டீயில் நன்றாகத் தோய்த்த கர்சீப் அல்லது துணியை வயிற்றின் மீது வைத்துக் கொண்டால் பெரிய அளவுக்கு ரிலீஃப் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இஞ்சி!!


உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி
சீன உணவுகளைப் பலரும் விரும்பிச் சாப்பிடுவதற்கு மிக முக்கியமான காரணம், அவர்களின் எல்லா வகை உணவுகளிலும் தவறாது இடம்பெறும் வெள்ளைப் பூண்டும், இஞ்சியும்தான்.
சீனாவில் குழந்தைகள் அதிகம் பிறப்பதற்கும் இஞ்சியே முதல் காரணம்! இஞ்சியில் சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டும் பொருள் அதிகமாய் இருக்கிறது.
இது மட்டுமின்றி, இதயநோய்கள், வயிற்றுப்பொருமல், உணவு செரியாமை, கடும் வயிற்றுவலி, இசிப்பு, மலட்டுத் தன்மை, உடம்பு எரிச்சல், முடக்குவாதம், சளி, மேகநோய், மாதவிடாய்க் கோளாறு, ஜலதோஷம் முதலியவற்றைப் பூரணமாகக் குணப்படுத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பிய மூலிகையாகவும் இஞ்சிக் கிழங்கு திகழ்கிறது.
இஞ்சி பறித்த காய்கறி போலவும், உலர்ந்த வற்றல் போலவும் கிடைக்கிறது. இவ்விரண்டிலும் சக்திமிக்க மருத்துவக் குணங்கள் மாறாமல் உள்ளன. உலர்ந்த இஞ்சிதான் சுக்கு!
உணவு செரிக்க எளிய வழி!
செரிமானக் கோளாறு உள்ளவர்கள் உணவு சாப்பிட்டதும் பறித்த (உலராத) ஒரு இஞ்சித் துண்டை வாயில் போட்டு மெல்ல வேண்டும். கடும் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி முதலியவற்றால் அவதிப்படுகிறவர்களும் இதே போல் ஒரு சிறு துண்டை மென்று தின்றால் போதும். இது வயிற்றையும், குடல் பகுதிகளையும் நன்கு பாதுகாக்கிறது. இந்தப் பகுதிகளில் வலி இருந்தாலும் உடனே குணமாகி விடுகிறது. சாப்பிட்ட உணவும் செரிமானம் ஆகிறது. வாந்தி ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.
இப்படிச் சாப்பிடப்படும் சிறு துண்டு உடனே நன்கு உமிழ் நீரைச் சுரக்கச்செய்கிறது. அதன்மூலம் உணவு செரிமானத்துக்கு இன்றியமையாதது பயன்பரும் காடிப் பொருளையும், ஒரு வகையான எண்ணெயையும் உற்பத்தி செய்கிறது. இதனால் உணவு உடனடியாக ஜீரணமாகிறது.
அசைவ உணவு, பொரியல் வகைகள் ஆகியவை அதிகமாய்ச் சாப்பிட்டால் இது போல் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடவும்.
இல்லையெனில், உலராத இஞ்சியை ரசமாக்கி அரை தேக்கரண்டி மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ரசத்துடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் ரசம், ஒரு தேக்கரண்டி புதினா இரசம், ஒரு தேக்கரண்டி தேன் முதலியவற்றைக் கலந்து அருந்தினால் போதும்.
காலை நேரத்தில் காய்ச்சலா?
காலை நேரத்தில் காய்ச்சலால் அவதிப்படுபவர்களும், மஞ்சள் காமாலை, மூலத்தொந்தரவு, வாந்தி, பித்தக் கோளறு ஆகியன உள்ளவர்களும், காய்ச்சல் ஏற்படுவது போல் உணர்பவர்களும் மேற்கண்ட முறையில் ஒவ்வொரு முறையும் அவ்வப்போதே தயாரித்துத் தினமும் மூன்று வேளை வீதம் அருந்தி வரவேண்டும் இஞ்சி, தேன், புதினா, எலுமிச்சை ஆகியவை கலந்த இந்த டானிக் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படாமல் முன்னரே தடுக்கும் சக்தி வாய்ந்த மருந்தும் ஆகும். உலராத இஞ்சிக்குப் பதிலாக சுக்குப் பொடியையும் பயன்படுத்தலாம்.
உடனே காய்ச்சல் தணிய…
ஆஸ்துமா, நுரையீரலில் காசம், கக்குவான் இருமல், மார்புச்சளி, கடுமையான காய்ச்சல் முதலியவை குணமாக ஒரு தேக்கரண்டி இஞ்சி இரசத்தை ஒரு டம்ளர் வெந்தயக் கஷாயத்தில் கலக்கவும். சுவைக்காக ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தவும், இன்புளுன்சா காய்ச்சல்காரர்களுக்கு இஞ்சி சேர்க்கப்பட்ட இந்தக் கஷாயம் உடனடியாக உடலை வியர்க்கச்செய்து காய்ச்சலின் வேகத்தை மட்டுப்படுத்திவிடுகிறது.
குழந்தை வேண்டுமா?
தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வமில்லாதவர்களுக்கு இது புத்துணர்ச்சியை ஏற்படுத்தித் தரும். மலட்டுத் தன்மை, விந்து முன் கூட்டியே வெளிப்படுதல், மேக நோய் போன்றனவும் உடனே குணமாகும். ‘ஆண்மை’ இல்லாதவன் என்று ஒதுக்கப்பட்ட ஆண்கள் இரவு படுக்கும் முன்பு அரைத்தேக்கரண்டி இஞ்சி இரசத்தையும், ஒரு தேக்கரண்டி தேனையும் அடுத்தடுத்து சாப்பிடவும், மூன்றாவதாக அவித்த கோழிமுட்டையில் பாதி சாப்பிடவும். இதனால் தாது பலம் பெறுவார்கள். தொடர்ந்து ஒரு மாதம் இதே போல் இரவில் சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும்.
ஜலதோஷம் உடனடி நிவாரணம்
ஜலதோஷம் குணமாக, இஞ்சியை சிறுசிறு துண்டுகாய் நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைக்கவும். பிறகு அதை வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் காபி சாப்பிடுவது போல சூடாகவே அருந்த வேண்டும்.
சுக்குப் பொடிகூட போதும் தேநீர் தயாரிக்க!
ஜலதோஷம் தொடர்பான காய்ச்சலும், ஜலதோஷமும் குணமாக இஞ்சித்தேநீர் தயாரித்து அருந்த வேண்டும். முதலில் இஞ்சித் துண்டுகளை கொதிக்கும் தண்ணீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து டீத்தூளை இந்தக் கலவையில் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பால், சர்க்கரை ஆகியன சேர்த்து அருந்தவேண்டும்.
இருமலா?
இஞ்சித் துண்டை ரசமாக்கி, அதில் தேன் கலந்து தினமும் நான்கு வேளை அருந்தினால் எப்படிப்பட்ட இருமலும் உடனே கட்டுப்படும். ஒரு வேளைக்கு இரண்டு மூன்று துண்டுகளை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் இரசமாக்கி வடிகட்டி, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்த வேண்டும். ஒவ்வொரு வேளையும் இதே போல் தயாரித்து உடனுக்குடன் அருந்தி வர வேண்டும். இருமலுக்கும் ஜலதோஷத்துக்கும் இஞ்சியைப் போல் சிறந்த மருந்து இல்லை என்பார்களே மூலிகை மருத்துவர்கள்.
இஞ்சிக் காபி அருந்தலாமா?
அதிகமான அல்லது மட்டமான மாதவிடாய்ப் போக்கு உள்ள பெண்கள், உலராத பச்சையான இஞ்சியைத் தோல் உரிந்து இடித்துப் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும். இதற்கு ஒரே ஒரு சிறிய இஞ்சித்துண்டு போதும். ஒரு டம்ளர் கொதிக்கும் தண்ணீரில் இந்தப் பொடியைப் போடவும். 5 நிமிடங்கள் கழித்து இறக்கி, வடிகட்டி அருந்த வேண்டும். தேவை எனில் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். காபி போல சுவையாகவும் இருக்கும். மாதவிடாய்க் கோளாறுகள் அனைத்தையும் குணமாக்கும். ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அந்தந்த வேளைச் சாப்பாட்டிற்கு பிறகு இந்தச் சூடான இஞ்சி காபியை அருந்த வேண்டும். இந்தியாவின் சில பகுதிகளில், இஸ்லாமிய பெண்கள் இந்த முறையைப் பின்பற்றி பலனடைந்துள்ளார்க்ள.
தலைவலி உடனே குணமாக!
உலர்ந்த இஞ்சியைச் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அந்தப்பசையை நெற்றியில் தடவ உடனே தலைவலி குணமாகும். பல் வலி என்றால் அந்த இடத்துக்கு மேலே முகத்தில் இந்தப் பசைையைத் தடவ வேண்டும்.
காது வலி என்றால், இஞ்சிச்சாற்றில் ஒன்று அல்லது இரண்டு துளிகளைக் காதுக்குள விட வேண்டும்.
எல்லா விதமான உடல் வலிகளையும் இஞ்சி குணமாக்கும். முதுகு வலி, இடுப்பு வலி என்றால் அந்தந்த இடங்களில் இஞ்சிப் பசையை அழுத்தி தடவினால் போதும்.
இதய நோய்களைக் குணப்படுத்தும் சுக்கு!
இதயத்தில் வலி, இதய பலவீனம், இதயப்படபடப்பு முதலியவை குணமாக இருபது கிராம் இஞ்சியை நன்கு கழுவி மிக்ஸி மூலம் ரசமாக்கி ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சாற்றில் இரு தேக்கரண்டி தேன் சேர்த்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இந்த முறையில் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் இதய சம்பந்தமான கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
உலர்ந்த இஞ்சியைத்தான் சுக்கு என்கிறோம். ஒரு தேக்கரண்டி சுக்குத்தூளை இதே போல் ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு, இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து, அருந்தினாலும் இதய வலி, பலவீனம், படபடப்பு முதலியவை குணமாகும்.
நீரிழிவு நோய்க்காரர்கள் இஞ்சிச் சாற்றிலோ சுக்குச் சாற்றிலோ கல்கண்டு போட்டு தண்ணீர் சேர்த்துக் குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
நெஞ்சு வலி குணமாகும்!
பாடகர்களும், தொண்டைப்புண், குரல் கமரல் முதலியவற்றால் அவதிப்படுவோர்களும் இஞ்சியை நன்கு மென்று தின்று உமிழ்நீரை வெளியில் துப்பவேண்டும்.
இளநீரில் தலா ஒரு தேக்கரண்டி சுக்குத் தூள், கல்கண்டுத் தூள் முதலியவற்றைக் கலந்து தினமும் இருவேளை வீதம் முடித்தால் நெஞ்சுவலி குணமாகும்.
ஆடுகின்ற பற்கள் கெட்டிப்பட்டு நிற்கவும், மஞ்சள் நிறப்பற்கள் ‘பளிச்’ என்று பிரகாசிக்கவும் 100 கிராம் சுக்குபொடியில் 7 கிராம் அளவு டேபிள் சால்ட் கலந்து, பற்பொடி தயாரிக்கவும். உப்பு சேர்க்கப்பட்ட இந்த சுக்குப் பற்பொடி வாய் நாற்றத்தையும் போக்கிவிடும்.
நறுமணப் பொருள்களும், வாசனைப் பொருள்களும் தயாரிக்க இஞ்சிலியிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயும் பயன்படுகின்றன. இவை இஞ்சி ரொட்டி, வயிற்றுக் கோளாறுகள் சம்பந்தமான மருத்துப் பொருள்கள் ஆகியன தயாரிக்கவும் பயன்படுகின்றன.
மேற்கத்திய நாடுகளில் சமையலறையிலும், ரொட்டி, பிஸ்கட், கேக்ஸ், சூப் வகைகள், ஊறுகாய் வகைகள், சாலட்டுகள் முதலியவற்றிலும் நறுமணப்பொருளாக இஞ்சி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆசிய மக்களுள் சீன மக்கள் இஞ்சியை அதிகம் சேர்த்துக்கொள்கின்றனர்.
இஞ்சி சேர்க்கப்பட்ட பீர், ஒயின், முதலியவை மிகவும் விலை குறைவானவையே!
வரலாறு
இஞ்சியின் தாயகம் இந்தியாதான். ஜிஞ்சிபேர் ஆபிசினாலன் என்பது இதன் தாவர விஞ்ஞானப் பெயர். இந்தியாவிலிருந்து சீனாவுக்கு அறிமுகமாகி அங்கிருந்து ஜப்பான், மேற்கு இந்தியத்தீவுகள், மேற்கு ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் இஞ்சி அறிமுகமாகியது. இஞ்சியில் 85 வகைகள் உள்ளன. மிகவும் உயர்ந்த வகை இஞ்சி பியூரெட்டோ ரிக்கோ மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளில் பயிராகிறது. இந்த நாட்டினர் இஞ்சியைப் பிழிந்து சாறாகத்தான் விற்கிறார்கள்.
உலகில் சீனாதான் இஞ்சியை அதிகம் இறக்குமதி செய்து தக்க பாதுகாப்புடன் இருப்பில் வைத்திருக்கிறது.
வயிற்றுவலி என்றால் உடனே வீட்டில் சுக்குத் தேநீர் போடுவதற்குக் காரணம் பண்டைய கிரேக்க வைத்திய மேதைகளான அலிசென்னாவும், கேலனுந்தாம். இவர்கள் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி முதலியவற்றுக்கு சுக்கு டீ தூள், அருந்தச் சொன்னார்கள். அப்போது இதற்குச் சுக்கு கஷாயம் என்று பெயர்.
வேத காலத்திலும் இஞ்சியும், உலர்ந்த இஞ்சியான சுக்கும் மிக முக்கியமான மருந்துகளாக இருந்திருக்கின்றன.
இவ்வளவு ஆதாரங்கள் எதற்காக? தினமும் சுக்கு தேநீர் அல்லது சுக்கு காபி சாப்பிட்டாவது உடல் நலத்தைப் புதுப்பித்து ஆரோக்கியமாக வாழ ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்!
குறைந்த செலவில் கிடைக்கும் தங்கபஸ்பம், இஞ்சி.

கிவி பழம்!!

பழங்களில் கிவி பழம் அபூர்வமான ஒன்று. இதனை மக்கள் அதிசய பழம், ஒரு வகையான சைனீஸ் நெல்லிக்கனி என்றெல்லாம் அழைப்பார்கள்.
இது மருத்துவ குணம் வாய்ந்த, உடலுக்கு மிகச் சிறந்த பழம். ருடர்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர் பால் 27 பழங்களை வைத்து ஆராய்ந்தார். இதில் கிவி பழத்தில் புரதச்சத்தின் அளவு மற்ற பழங்களை விட அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வில் தெரிந்துள்ளது.
கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால், மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும்.
மேலும் ஏப்ரல் 2004ஆம் ஆண்டில் நடந்த ஆய்வின் படி, வாரத்திற்கு 5 முதல் 7 பழங்கள் சாப்பிடும் குழந்தைகளின் மூச்சுக்கோளாறு பிரச்சனை குறைவாக சாப்பிடுபவர்களை விட 44% குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிவி மாதிரி வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால் வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது.
வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில் கொழுப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது.
போலிக் ஆஸிட் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும்.
நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, கர்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின்களையும் தருகிறது. மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்ததோடு மட்டுமல்லாமல் இதய நோய் வராமலும் தடுக்கிறது.
டையட் மேற்கொள்வதற்கு சிறந்ததாகவும் உள்ளது. ஏனென்றால் இதில் இரும்புச்சத்து இருப்பதால் பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கும்.
மேலும் இரும்புச்சத்து கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது. இது உடல் எடையைக் குறைப்பதோடு, உடலுக்கு சிறந்த பழமாகும்.
கிவி பழத்தில் ஜிங்க் இருப்பதால் தோல், முடி, பல் மற்றும் நகங்களுக்கு சிறந்தது.

முதுகு வலி ஏன் வருது தெரியுமா?

முதுகு வலி ஏன் வருது தெரியுமா?

இன்றைய காலத்தில் நோயில்லாத மனிதரைப் பார்ப்பது மிகவும் கடினமானது. ஏனெனில் அந்த அளவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நோயானது புகுந்து விளையாடுகிறது. சும்மா சொல்லக்கூடாது, உடலில் வரும் நோய்க்கு முதற்காரணமே நாம் தான். ஆனால் அதை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல், நான் ஒன்றும் செய்யவில்லை, ஆனால் எதற்கு இது வருகிறது என்று தெரியவில்லை என்று சொல்வோம். முதலில் நாம் சரியாக இருந்
தால், நமக்கு எந்த ஒரு நோயும் வராது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது உடலில் வரும் நோய்களில் பெரும்பாலோனோருக்கு இருப்பது முதுகு வலி. இந்த வலியானது நமக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இப்போது அந்த முதுகு வலி ஏற்படுவதற்கு என்னவெல்லாம் காரணம் என்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

நீண்ட நாள் வலி

முதுகு அல்லது கழுத்து அல்லது மற்ற இடங்களில் ஏதாவது வலி ஏற்பட்டால், அந்த வலியை சரிசெய்ய நாம் உடலை ஏதேனும் ஒரு வித்தியாசமான நிலையில் நீண்ட நேரம் வைத்திருப்போம். மேலும் தற்காலிகமாக அந்த வலியை நீக்க மேற்கொண்ட அந்த நிலையை எப்போது வலி ஏற்பட்டாலும் பின்பற்றுவோம். ஆகவே அவ்வாறு வித்தியாசமான நிலையில் வைப்பது உடலின் பல பகுதியை பாதித்து, வலி அல்லது பிடிப்பு போன்வற்றை உண்டாக்குகிறது.

ஊட்டச்சத்து குறைவு

நமது தண்டுவடம் மற்றும் முதுகிற்கு போதுமான ஊட்டச்சத்தானது அவசியம். அப்படியிருந்தால் தான் தண்டுவடம் நன்கு வலிமை பெற்று நேராக இருக்கும். அதிலும் ஊட்டச்சத்துக்களில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்றவை குறைவாக இருந்தால், எலும்புகள் மற்றும் தசைகள் வலிமையிழந்து, பின் இறுதியில் அதிகமான வலியை உண்டாக்கும்.

பரம்பரை

ஒருவேளை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முதுகு வலி இருப்பின், அது பரம்பரையாக தொற்றிக் கொண்டிருக்கும். இவற்றால் கூட காரணமின்றி வலி ஏற்படும். ஆகவே அப்போது அந்த வலியைப் போக்குவதற்கு சரியான நிலையில் உட்கார்ந்து வந்தால், சரிசெய்யலாம்.

அதிக எடை

நாம் சரியான நிலையில் எப்போதும் இல்லாததற்கு காரணம் உடல் எடையும் தான். ஏனெனில் இதனால் அவர்களது வயிற்றில் அதிகமான அளவில் கொழுப்புகள் சேர்ந்து, தொப்பையாக வருவதோடு, அந்த தொப்பை நேராக உட்காரவிடாமல், முன்புறமாக இழுக்கிறது. இதனால் முதுகு வளைந்து, கூன் உண்டாகி, இறுதியில் வலியை அதிகமாக்குகிறது.

பழக்கம்

சில நேரங்களில் நடக்கும் நிலை கூட, முதுகு வலியை ஏற்படுத்தும். உதாரணமாக, நடக்கும் போது தலையை குனிந்து கொண்டு நடக்கும் போது, தன்னை அறியாமலே தோள்பட்டையும் வளையும் நிலை ஏற்படுகிறது. மேலும் ஏதாவது ஒரு எடையுள்ள பொருளை ஒரே பக்கத்தில் தூக்கும் போது அல்லது படுக்கும் போது சரியான நிலையில் படுக்காமல் இருப்பது போன்ற பழக்கங்கள் கூட முதுகு வலி வருதற்கு காரணமாகும்.

கம்ப்யூட்டர் வேலை

முதுகு வலி பெரும்பாலான கம்ப்யூட்டர் முன் வேலை பார்ப்பவர்களுக்கே ஏற்படுகிறது. ஏனெனில் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் போது, கழுத்து மற்றும் தலை சற்று முன்னரும், தோள்பட்டை சற்று வளைந்தும் தான் இருக்கும். இதனால் முதுகை நேராக வைக்காமல், நீண்ட நேரம் வளைந்தே வைத்திருப்பதால், அந்த நிலை பெரும் வலியை உண்டாக்கும்.

ஃபேஷன்

ஃபேஷன் என்ற பெயரில் வந்துள்ள உடைகள் மற்றும் செருப்புகள் கூட இந்த வகையான வலிக்கு முக்கிய காரணங்களாகும். அதிலும் பெண்களுக்கு பென்சில் ஹீல்ஸ், ஹை ஹீல்ஸ், டைட்டான ஆடைகள் என்றும், ஆண்களுக்கு என்றால் நல்ல எடையுள்ள பூட்ஸ், பெல்ட் என்றும் வந்து, அவர்களின் முதுகிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் தாங்க முடியாத வலியை கொடுக்கிறது.